Tuesday, June 8, 2010

அப்பா யாரம்மா???


" நம்ம புகழேந்தி என்னம்மா வளந்துட்டான் தெரியுமா? " என மகன் பள்ளிக்குச் சென்றதும் கமலி தன் காதலனின் நிழல்படத்தை எடுத்து நிஜங்களைப் பேசினாள். அன்று புகழேந்திக்கு பத்து வயது பிறந்தநாள். மகனுக்கு என்னப் பரிசு தரலாம் என பேசாத காதலனிடம் கேட்டாள் கமலி. காதலன் பேசவில்லை என்றாலும், அவனை அறிந்தவள் ஆயிற்றே... அவன் எழுத்துக்கு எஜமானாக எண்ணும் ஓர் ஜாம்பவானின் புத்தகத்தையே பரிசாகத் தன் மகனுக்கு கொடுக்க நினைத்தாள். புத்தகக் கடைக்குச் சென்றாள். தன் காதலன் லயித்து படித்து, சுவாரசியமாக விமர்சித்த அந்த ஜாம்பாவனின் சில புத்தகங்கள் நினைவிற்கு வந்தது. அந்தப் புத்தகங்களை வாங்க தன் காதலன் ஏங்கிய நாட்களும் அவள் மனதில் இன்னும் பசுமையாகவே ஊஞ்சல் ஆடின. தன் காதலன் இருபது வயதுக்கு மேல் படித்த புத்தகங்களை, அவனது மகன் புகழ் பத்து வயதில் படிக்கப் போகிறான் என்பதில் கமலிக்கு பெருமையே. விஞ்ஞானம் பறைச்சாற்றிய கதைகளிலிருந்து மெஞ்ஞானம் சொன்ன கடவுள் இருக்கிறாரா வரை பத்து புத்தகங்கள் ஆசை ஆசையாய் வாங்கினாள். மகன் வீடு திரும்பியதும்,"அம்மா, உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேனு பாரு, கண்ணா" என்றாள் கமலி. மகன் தன் தாயானவள் வழங்கிய பொட்டலத்தைப் பிரித்து பார்த்தான். "அம்மா, இந்தப் புக்கெல்லாம் அப்பாக்கு பிடிச்ச புக்குனு நீங்க சொல்லிரிருக்கிங்க மா. எனக்கு என்ன பிடிக்கும்னு ஏன் மா நீங்க கேக்கல?" என்றான் புகழ்."ஐய்யோ SORRY டா கண்ணா..இந்தப் புக்குங்க சாதாரண புக்கு இல்ல. உங்க அப்பாவுக்கு பிடிச்ச புக்குங்க பா. உனக்கும் பிடிக்கும்." என மகனைச் சமாதானம் செய்தாள் கமலி. தன் தந்தையைப் போலவே உயரமாக வளர்ந்திருந்த புகழின் பேச்சிலும் வளர்ச்சி காணப்பட்டது. "அம்மா, அப்பா யாருனு காட்டல. அவரு எப்படி இருப்பாருனும் நீங்க காட்டல. அவருக்கு புடிச்ச புக்க மட்டும் ஏன் மா வாங்கி தரீங்க??" மகனின் கேள்வியில் கமலியின் மனம் சரிந்தது. பேச்சிழந்தாள். "அம்மா, அப்பாக்கு பிடிச்சதுனால இல்லை, அப்பாக்கு புடிச்ச புக்கு உங்களுக்கும் புடிக்கும்னு எனக்கு தெரியும். அதனால இதெல்லாம் நிச்சயம் படிக்கிறேன் மா" என்றான் புகழ். "அம்மா, உங்களுக்கு ஒன்னு வச்சிருக்கேன். இந்தாங்கா. மா, நான் TUITION போயிட்டு வரேன்" என புகழ் புறப்பட்டுவிட்டான். ஒன்னும் புரியாது, மகன் தந்த ENVELOP-ப்பை திறந்தாள் கமலி. உள்ளே வெள்ளைக் காகிதத்தில் புகழ் கைப்பட என்னமோ எழுதியிருந்தான்..........என்னென்னமோ எழுதியிருந்தான்..........

பேரன்புமிக்க அம்மா கமலி மணியனுக்கு,

" புகழேந்தின்னு பேரு வச்ச,
அப்பன் பேர ஏன்மா மறந்து வச்ச??
பத்து வயசாச்சு,
பெத்தவன தெரியலையே!!
பொத்தி பொத்தி நீ வளத்த,
அப்பன் யாருனு காட்டலையே!!

அப்படி என்ன ரகசியம் தாயே??
உன் மகன் நானும் அந்நியம் ஆனேனோ??
உன் அப்பா போலதான் டா நீனு சொன்னியே தவிர
இதுதான் உன் அப்பானு சொல்லலையே!!
என்னம்மா கதைன்னு கேக்கலம்மா...
எங்கே அப்பானுதான் கேக்குறேன் தாயே...

அப்பா எழுத்தாளன்னு அடையாளம் போதுமா, தாயே?? - இல்ல
நடத்தக்கெட்டவனு அடையாளம் உனக்கு தேவையாம்மா??
சின்னப்புள்ளனு இன்னும் சீராட்டி வளக்குற..
எழுத்தாளனுக்கு பொறந்த புள்ள-
பிஞ்சிலே பழுதிடும்னு நீ அறியலையா, என் தாயே?
உன் பேருக்கு பின்னால உன் அப்பன் பேரு எழுதுறீயே..-ஆனா
என் பொறப்புக்கே கேள்வி குறி வச்சிட்டியே??

எழுத்தாளன் புள்ள நானும் எழுத்தாளன் ஆயிடுவேன்..
நீ ஆசைப்பட்டதால இல்லம்மா...
இந்த எதிர்கால எழுத்தாளனுக்கு முன்னுரை வேணும் தாயே..
அப்போதாவது அப்பன் பேர நீ சொல்வாய் என்றே...
என் கடமை நான் செய்வேன்..
உன் கடமை நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டுமா??
அம்மா, அப்பா யாரம்மா?????????????????? "

அதே பேரன்புடன் மகன்,
புகழேந்தி ???

இப்படித்தான் புகழ் எழுதியிருந்தான். இதைப் படித்து முடிக்கும் போது கமலி துடித்துடித்தாள். காதலனின் புகழுக்காக, தான் பெற்ற புகழை இப்படி அப்பா பெயர் தெரியாதவானாக ஆக்கிவிட்டதை நினைத்து பதறினாள். இனி, வீடு திரும்பும் மகனுக்கு அவனது அப்பா யாரென்று சொல்லுவாளா,கமலி?? இல்லை, தன்னைத் தேடாது மனைவி, மக்களுடன் சுகமாக வாழும் காதலனுக்காக பெற்ற பிள்ளையை இன்னும் வதைக்கப் போகிறாளா, கமலி???? புகழேந்திக்கு இருபது வயதாகட்டும்... அப்போ என்ன நிகழ்ந்தது என தெரிய வரும்....

No comments:

Post a Comment