Saturday, August 21, 2010

குடைக்குள் நான்...!




ஜில்லென்று தென்றல்..
சொட்ட சொட்ட மழை..
இரு கைகள் விரித்து,
இரு கால்கள் துள்ள..
நனைந்த ஆடை,
என் அழகைச் சொல்ல..
ஈர உதட்டோடு,
காதல் செய்ய அவனோடு..
ஆசைதான்..
கொள்ளை ஆசைதான்..!
இருந்தும்
என் ஈரம் தாக்கி,
அவனுக்கு ஜுரமாகிவிடுமோ
என பயந்து
குடை விரித்தேன்..!
குடைக்குள்
நான்...!
அவள் ஆடைக்குள்
என்னவன்…!!!

-கயல்விழி

5 comments:

  1. //அவள் ஆடைக்குள்
    என்னவன்…!!!// இந்த அவள் யாரு? சரியா புரியல கவல்விழி

    ReplyDelete
  2. ரசிக்க நினைத்த என்னை நனைத்தது இம்மழைக்கவிதை!!

    ReplyDelete
  3. ஈர உதட்டோடு,
    காதல் செய்ய அவனோடு..
    ஆசைதான்..
    கொள்ளை ஆசைதான்..!
    இருந்தும்
    என் ஈரம் தாக்கி,
    அவனுக்கு ஜுரமாகிவிடுமோ
    என பயந்து
    குடை விரித்தேன்..!

    அன்பில் தொடங்கி இதயத்தில் முடிந்த உறவிற்கு, அந்த அன்புள்ளத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படகூடாது என்ற பயம் நிச்சயம் இருகும்...
    ஆனால், அந்த அன்பை வாங்கியவர்கள்...
    உணராத வரை,
    அதை நினைத்து வருந்துவது,
    நாம் பலவீனமாகிவிட்டதை காட்டுகிறது...
    எனவே, உள் புகுந்த உருவத்தை வெளியேற்றி,
    அன்பை மதிக்கத் தெரியும் உள்ளங்களுக்கு அர்பணிப்பது மேலும் சிறப்பு என்பது என் கருத்து...
    தவறாக இருந்தால் மன்னிக்கவும் தோழி...

    அவள் ஆடைக்குள்
    என்னவன்…!!!


    இந்த வலியை உணர முடிகிறது...
    வலியை சிரித்து எதிர்கொள்ள பழகிக்கொள்வது புத்திசாலித்தனம்...:)

    ReplyDelete