
தேனிலவுக்கு
மலைப் பிரதேசம் வேண்டாம்
தீவு வேண்டாம்
ஐந்து நட்சத்திர விடுதியும் வேண்டாம்…
பாலைவனம் போதும்!!!
மணல் தரையை மெத்தையாக்கி;
பச்சைக் கள்ளிச் செடிகள் இடையே
இச்சைக் கொள்வோம்!!!
வெப்ப மயத்தில்
காதல் மயக்கம் - என்னுள்
பெண் குழந்தைக்கான பயணம் சாத்தியம் – இது
மருத்துவ விஞ்ஞானிகள் சொன்னது…
முதல் குழந்தை
பெண் குழந்தை வேண்டும்…
தேனிலவுக்கு
சஹாரா, ராஜஸ்தான் போகலாம்
வாங்க…!!!!
அன்புடன்,
மனைவி
